கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் – ஒத்திவைப்பு..
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் சட்டசபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.