உலக சாம்பியனை தோற்கடித்த இளம் கிராண்ட் மாஸ்டர்!!

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர்.எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.இந்நிலையில், உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.