உக்ரைன் : அமைதியாய் பேசி தீர்க்க வாய்ப்பில்லை.. கிளர்ச்சி பிராந்தியங்களுக்கு விடுதலை..பிடிவாத புடின்
மாஸ்கோ : உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையில் பேசி தீர்க்க எந்த வாய்ப்பும் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் போர் பதற்றம் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.எல்லைப் பகுதிகளில் படைகளை நிறுத்தி உள்ள ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரம்பித்த ரஷ்யா! சீறி கிளம்பிய குண்டுகள்! உக்ரைன் எல்லையில் 5 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பதற்றம்போர் பதற்றம்போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்கப்போவதில்லை என ரஷ்யா கூறி வருகிறது. இருந்தாலும் எல்லைகளில் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருவதால் போர் பதட்டம் தணியவில்லை. இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த ராணுவத்தின் ஒரு பகுதியினர் உக்ரைன் எல்லையில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு உள்ளனர் என ரஷ்யா கூறியது.படைகள் குவிப்புஆனால் அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை என நேட்டோ தெரிவித்துள்ளது. மேலும் படை வீரர்களை திருப்பி அனுப்புவதாக கூறி விட்டு மேலும் படைகளை குவித்து வருவதாக தவறாக வழி நடத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 7,000 வீரர்கள் 48 மணி நேரத்திற்குள் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமாதானம் என்று வெளியில் கூறிவிட்டு படைகளை எல்லையில் குவிப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதற்கு கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளது.கிளர்சியாளர்களுக்கு சுதந்திரம்இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பிராந்தியங்களான டோனேட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகியவற்றின் தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், தங்கள் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர். அந்த நாடுகளின் கோரிக்கைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுக்கு சொந்தமான பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷ்யா தன்னிச்சையாக அறிவித்தால், அது உக்ரைனில் மேலும் பதற்றத்தை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.பேசி தீர்க்க முடியாதுஅதேபோல், உக்ரைன் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர முடியாது என புதின் தெரிவித்ததால் இன்றோ அல்லது இன்னும் ஒரு சில தினங்களிலோ உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என உலக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். நேற்று தான் பிரான்ஸ் அதிபர் மேக்ராணிடம் புடின் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், இன்று புடின் அதிரடியாக பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.