இளைஞரின் புது முயற்சி: கலக்கும் ஒட்டக பால் விற்பனை!!

தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் ஓட்டக பால் விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்கு குறிப்பாக சர்க்கரை வியாதி மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மலிவு விலையில் கொடுத்து வருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை மூட்டியுள்ளது. இந்த ஒட்டகப் பாலில் அதிக அளவு இரும்பு, ஜின்க், பொட்டாசியம் , காப்பர் , சோடியம், மக்னீசியம் போன்றவை உள்ளன. பசும்பாலை விட அதிக புரத சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் பி2 அதிகமாக உள்ளது. மாட்டுப் பாலை விட ஒட்டகப் பாலில்தான் நிறைய சத்துக்கள் உள்ளதென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.