66 வயதில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம்…

இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின். 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. 66 வயதாகும் இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஒரு பெண், தனது கணவர் குறித்து ஒரு புகார் கொடுத்தார். தன்னுடைய கணவர் பல பெண்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் ரமேஷ் குமாரை கைது செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.