மாணவி தற்கொலை விவகாரம்: சிபிஐ அதிகாரிகள் விசாரணை துவக்கம்..
தஞ்சாவூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை துவங்கியது. திருக்காட்டுப்பள்ளி போலீசார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார். பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால் தான், தன் மகள் தற்கொலை செய்தார் என, மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.