பிரித்தானியாவை நெருங்கும் 3-வது புயல்: மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.கடந்த வாரம் புதன்கிழமை துவக்கி Dudley என்னும் புயல் பிரித்தானியாவைப் புரட்டி எடுத்த நிலையில், அதன் தாக்கம் அடங்குவதற்குள், வெள்ளிக்கிழமை Eunice புயல் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. அதன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் சுமார் 155,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், Franklin என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று பிரித்தானியாவைத் தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.