101 ‘சத்ராலயம்’ 4,000 ஏழை மாணவர்கள் பயன்…
சென்னை:பள்ளிக்கு செல்லும் ஏழை மாணவர்கள் தங்க, உணவு, டியூஷன் வசதியுடன் கூடிய, ‘சத்ராலயம்’ என்ற மாணவர் விடுதிகளை, ‘எய்ம் பார் சேவா’ அமைப்பு நடத்தி வருகிறது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் முயற்சியால், 2000-ம் ஆண்டில், எய்ம் பார் சேவா அமைப்பு தொடங்கப்பட்டது. , கிராமப்புற மாணவர்கள் பள்ளி செல்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், குழந்தைகளின் கல்விக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, 2001-ல் கோவை மாவட்டம், ஆனைக்கட்டியில், ‘சத்ராலயம்’ என்ற முதல் மாணவர் விடுதி தொடங்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.