வேகமாக பரவும் ‘பி.ஏ.2’ வைரஸ் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!!

ஜெனீவா: ஒமைக்ரான் தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், அதில் இருந்து உருவான ‘பி.ஏ.2’ வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுதும், மூன்றாம் அலைக்கு வழிவகுத்த, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி, நாம் நகர்ந்து வருகிறோம்.இந்நிலையில், ஒமைக்ரானினிலிருந்து உருமாறிய பி.ஏ.2 வகை வைரசால், மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.