பரிசு மழையில் திருமழிசை வாக்காளர்கள்!!!
திருமழிசையில் இன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் பரிசு மழையில் நனைய வைக்கப்பட்டனர். ஒரு வாக்காளருக்கு 2,000 – 6,000 ரூபாய் வரை கிடைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பட்டுப்புடவை, 25 கிலோ அரிசி மூட்டை, ‘எவர்சில்வர்’ தட்டுடன் இரு குத்துவிளக்கு என பல பரிசு மழையில் வாக்காளர்கள் நனைந்து உள்ளனர்.இன்று, ஓட்டுப்பதிவு நாளான நிலையில், நேற்று முன்தினம் மாலை பிரசாரம் நிறைவுற்றது. இதையடுத்து இரவு முழுதும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசுகளை வழங்கி வந்தனர்.பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் பரிசு மழையால் நனைய வைக்கப்பட்டது வாக்காளர்களிடையே கடும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.