2-வது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை இழந்து தென்ஆப்பிரிக்கா பரிதாபம்
ஹென்ரி நிக்கோல்ஸ் சதம் விளாச கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ஹென்ரி 7 விக்கெட் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா 95 ரன்னில் சுருண்டது. பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும், நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஹென்ரி நிக்கோல்ஸ்- நீல் வாக்னர் ஜோடி சிறப்பாக விளையாடியது. நீல் வாக்னர் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.