ரவுடிகள் சிக்கி தவிப்பு-தாம்பரம் மாநகர காவல்!!!

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக பதவிஏற்றிருக்கும முனைவர் திரு மு.ரவி அவர்கள் ரவுடிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தாம்பரம் மாநகர பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு காவல் ஆணையர் முனைவர் திரு மு.ரவி அவர்கள் உத்தரவிட்டுள்ளார் இந்த அடிப்படையில் பல காவல் நிலையங்களில் பல ரவுடிகளை பிடித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் ஒரு சில ரவுடிகள் காவல் நிலையத்திற்கு பிடிபடாமல் தலைமறைவாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் 6 வருடங்களாக பல காவல் நிலையத்தில் தேடப்பட்டு வரும் பாம்கை நடராஜனை S16காவல் நிலையம் பிடித்து அவரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது (இவர் மீது திருட்டு வழிப்பறி கொலை முயற்சி கஞ்சா விற்பனை என 30 வழக்குகள் நிலையில் உள்ளது) ஆகையால் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு மு.ரவி அவர்கள் S16 காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.