மெடபாலிஸத்திற்கும் எடை இழப்புக்கும் உள்ள தொடர்பு!!!

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் பிரச்சனை ஏதும் இருக்காது. நிறைய சாப்பிட்டாலும் கூட எடை அதிகரிக்காமல் இருப்பதோடு, எப்போதும் சுறூசுறுப்பாகவும் இருப்பார்கள். அப்போது பொதுவாக எல்லோரும் கூறுவது, அவரது மெட்டபாலிஸம் அதாவது வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கிறது என்பது தான். 

வளர்சிதை மாற்றம் என்றால் என்ன

எளிய மொழியில் கூற வேண்டும் என்றால், உணவை ஆற்றலாக மாற்றுவது வளர்சிதை மாற்றம் ஆகும். நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது என்ற வகையிலும் இதைப் புரிந்து கொள்ளலாம். வளர்ச்சிதை மாற்றம் அதிகமாக நிகழும் போது கலோரிகள் அதிக எரிக்கப்பட்டு உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.  

நமது உடலில் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால்,  சுறுசுறுப்பாக இருக்கலாம். மெட்டபாலிசம் சரியாக இல்லாதவர்களுக்கு உணவு அஜீரணம், எடை அதிகரிப்பு, எலும்புகள் மற்றும் தசைகளில் வலி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். மெட்டபாலிசம் நன்றாக இருந்தால் உடலில் கொழுப்பு சேராது. அதனால் உடல் பருமன் அதிகரிக்காது. சிறந்த வளர்சிதை மாற்றத்தினால், உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை குறைய பெரிது உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம். முதலில் நன்றாக தூங்க வேண்டாம். உடற்பயிற்சி செய்வதோடு, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது தவிர ருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
 புரதச்சத்து நிறைந்த உணவுகளும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. புரோட்டீன் நிறைந்த உணவுகளான பால், பாலாடைக்கட்டி மற்றும் பிற பால் பொருட்களுடன், முட்டை, கோழி, மீன், கடல் உணவு மற்றும் இறைச்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.  

கிரீன் டீயில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு,  உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. இது தவிர, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற வைட்டமின்-சி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.