பிரேசில் நிலச்சரிவு…!!!

பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.பிரேசிலில் கடந்த செவ்வாய்கிழமை, திடீரென 25.8 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. மூன்று மணி நேர இடைவெளிக்குள் இவ்வளவு மழை பெய்ததால், மக்களோ அந்நாட்டு அரசோ மழைக்கு தயாராக இல்லை. இந்நிலையில் பிரேசிலின் மலைபாங்கான பகுதியான ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.