பிரிட்டனில் டெல்டாக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

பிரிட்டனில் கொரோனா வைரஸின் இன்னொரு திரிபான டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கடந்த 2019-ம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் கொரோனஆ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்ததில் இருந்து அதன் உருமாற்றங்களான ஆல்பா, பீட்டா, காமா, லாம்ப்டா, டெல்டா, ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகள் வந்து விட்டன. இதற்கு அடுத்து உருமாறிய B.1.1.529 என்ற மரபணு எண் கொண்ட ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மை கொண்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் ஒமைக்ரான் அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒமைக்ரானால் உயிர்ப் பலி, தீவிர நோய் பாதிப்பு உறுதி செய்யப்படாவிட்டாலும், இதன் பரவல் தன்மையால் ஒமைக்ரான் வைரஸ் கவலைக்குரிய திரிபாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பிரிட்டனில் டெல்டாக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பர் இறுதியில் சைப்ரஸ் நாட்டு மரபணு விஞ்ஞானிகள் டெல்டாக்ரான் பற்றி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.