திருமலைக்கு ரூ.9.2 கோடி சொத்து எழுதி வைத்த சென்னை பக்தை!!!!

சென்னையைச் சேர்ந்த கல்லுாரி பேராசிரியை, திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்துக்கு எழுதி வைத்த 9.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நேற்று அவரது சகோதரி ஒப்படைத்தார்.சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பர்வதம்; கல்லுாரி பேராசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஏழுமலையானின் தீவிர பக்தையான இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமாக நன்கொடை வழங்கியுள்ளார். இவர் தன் 76வது வயதில் கடந்த ஆண்டு மே மாதம் காலமானார். இவருக்கு சென்னையில் திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டியில் தலா ஒரு வீடு இருக்கிறது. இவற்றின் தற்போதைய மதிப்பு 6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.