தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மெரினா கடற்கரையில் பார்வையிடலாம்!!!
சென்னை மாநகருக்குள் இன்று மாலை அலங்கார ஊர்திகள் வர இருக்கிறது. இந்த அலங்கார ஊர்திகள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 26-ந்தேதி சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 அலங்கார ஊர்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப் படுத்தும் பொருட்டு, கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.