டி-20 போட்டியில் இந்தியா வெற்றி!

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20  போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 61 ரன்கள் குவித்தார். மேயர்ஸ் 31 ரன்களும், கேப்டன் கிரன் பொல்லார்ட் 24 ரன்களும் சேர்த்தனர். முதல் டி-20 போட்டியில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.