டிஜிபிக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு: உடனே ஆக்‌ஷன் எடுங்க!!

காவல்துறை, உளவுத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தேர்தல் நாள் அன்று சென்னையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதற்கு வசதியாக சிறையில் இருந்த ரவுடிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். பாஜகவும் தொடர்ந்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக அவ்வப்போது ஆளுநரை சந்தித்து புகார் கடிதம் வாசித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இதுபோன்ற புகாரை கோவை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.