கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்!

சுற்றுசூழல் மாசு, ஊட்டச்சத்து குறைப்பது, மரபணு மாறுபாடு போன்ற பல காரணங்களால் தலைமுடி பாதிப்படைகிறது.    நமது அழகை மெருகேற்றி காட்டுவதே ஆரோக்கியமான கூந்தல் தான்.  அவற்றை பலவித பக்குவம் செய்து பாதுகாக்க முடியாதவர்களுக்கென்றே சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி, ஹீட் ஸ்டைலிங், முடிகளுக்கு சாயம் பூசுதல் போன்றவற்றால் உங்கள் தலைமுடி ஒவ்வொரு நாளும் பல சேதங்களுக்கு உள்ளாகுகிறது.  உங்கள் முடியை நீங்கள் ஹீட் ஸ்டைலிங் செய்வதற்கு முன், முடிகளில் வெப்பத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய வெப்பப் பாதுகாப்பு கிரீம் அல்லது ஊட்டமளிக்கும் சீரம் போன்ற ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.  எப்போதும் தலைமுடிக்கு மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும், தலை குளித்த பிறகு ஹேர் ட்ரையர் எதுவும் அடிக்கடி பயன்படுத்தாமல் முடியை காற்றில் உலரவிடவும்.  பிரத்யேகமாக தலைமுடிகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகள் பயன்படுத்துவது மற்றும் இளஞ்சூடான எண்ணெய் கொண்டாய் தலையை மசாஜ் செய்வது போன்றவற்றை செய்வதன் மூலம் தலைமுடி ஆரோக்கியமாகும்.  தலை முடியை மென்மையான துணிகளால் செய்யப்பட்ட ஹேர் பேண்டுகள் மூலம் காட்டி கொள்ளலாம்.

முடி உதிர்தலால் அவதிப்படுபவர்களுக்கு மற்றொரு எளிய வழி என்னவென்றால் சாடின் துணியாலான  தலையணை உறையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி உதிர்வு கட்டுப்படுவதை நீங்களே பார்க்கலாம்.  சாடின்(satin) ஒரு மென்மையான பொருள் என்பதால், சாதாரண பருத்தி, ரேயான் அல்லது கலவையான பாலிஸ்டர்  துணிகளுக்கு பதிலாக, இரவில் உறங்கும்போது சாடின் துணியிலாலான தலையணைகளை பயன்படப்பியதி கொள்ளுங்கள், இவை உங்கள் முடியை பாதுகாப்பதோடு ராயலான வாழ்க்கையை வாழ்வது போன்றதொரு எண்ணத்தையும் ஏற்படுத்தும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.