இந்திய சிறைகளில் இருந்த 12 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளிட்ட 12 பேர், தனி வாகனம் மூலம் வாகா எல்லை வரை கொண்டுசெல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 80 வயது முதியவர் ஆவார். சிறைகளிலிருந்து விடுதலையாகி தாய் மண்ணில் கால் பதித்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேரும், இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.