வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்குதான் ஹிஜாப் தேவை: பிரக்யா தாகூர்
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பா.ஜனதா எம்.பி. பிரக்யா தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், உடுப்பி மாவட்டத்தில் ஆறு மாணவிகள் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். அதில் இருந்து ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது இதுகுறித்த விசாரணை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.