கேரளாவுக்கு கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!!!!

இனயம்புத்தன்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் நேற்று இனயம்புத்தன்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக கேரளாவை நோக்கி  ஒரு ஆட்டோ வேகமாக சென்றது. போலீசார் ஆட்டோவை நிறுத்துமாறு சைகை  காட்டினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேமடைந்த போலீசார் வாகனத்தில் துரத்தி சென்றனர்.சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவை மடக்கி பிடித்தனர். பின்னர் அதை சோதனையிட்டபோது, சிறுசிறு மூடைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரான கீழ்குளம் உடைவிளையை சேர்ந்த ராமன் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மேலும் ஆட்டோவுடன் அரிசி மூடைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.