குமரி:ஒரே நாளில் மது விற்றதாக 70 பேர் கைது!

குமரியில் ஒரே நாளில் மது விற்றதாக 70 பேரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, திருட்டு மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய குற்ற செயல்களை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய தீவிர கண்காணிப்பில் மது விற்றதாக 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கடந்த 7 நாட்களில் மட்டும் மது விற்றதாக 374 வழக்குகள் பதிவாகி 1,847 மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.