ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு”.. திருவாரூர்!!!

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய் விளை நிலங்களை சூழ்ந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தன.  எருக்காட்டூர் பகுதியில் உள்ள நடராஜன் என்பவருடைய விளை நிலத்தில் எண்ணெய் பரவியுள்ளது. இதில் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் முற்றிலும் எண்ணெயால் சூழப்பட்டுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள், வயலியில் பரவியுள்ள எண்ணெயை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.