1கிலோ டீ தூள் ரூ.99,999க்கு ஏலம்…..

கவுஹாத்தி:அசாமில் நடந்த டீ துாள் ஏலத்தில், குறிப்பிட்ட வகை டீ துாள், 1 கிலோ, 99,999 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு விளையும் அசாம் டீ துாள், சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்நிலையில், கவுஹாத்தியில் உள்ள டீ ஏல மையத்தில் நேற்று முன்தினம் டீ துாள் ஏலம் நடந்தது.
இதில், ‘ஏ.எப்.டி., டெக்னோ டிரேடர்ஸ்’ என்ற நிறுவனத்தின், ‘கோல்டன் பேர்ல்’ டீ துாள், 1 கிலோ, 99,999 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.நம் நாட்டில் டீ துாளுக்கு கிடைத்துள்ள அதிகபட்ச விலை இது. கோல்டன் பேர்ல் டீ, திப்ரூகர் விமான நிலையம் அருகில் உள்ள லோஹோவாலில் உற்பத்தி செய்யப்பட்டது. இயந்திரங்கள் உதவி இல்லாமல் கைகளால் பதப்படுத்தப்பட்டு, அரைக்கப்பட்டது இந்த விசேஷ டீ துாள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.