மீண்டும் ரஜினிகாந்த் ஜோடி ஐஸ்வர்யா ராய்?

ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.நாயகியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருந்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.