பி.எம்.சி. வங்கி ஊழலில் பணம் பெற்று உள்ளனர்: சஞ்சய் ராவத்

சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று தாதரில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சிறை செல்லும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை அறிவிப்பதாக தெரிவித்து இருந்ததால் அவரது பேட்டி தொடர்பாக பரபரப்பு நிலவியது.இதற்காக சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சிவசேனா தலைமை அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பத்திரிகையாளர் சந்திப்பில் சஞ்சய் நிருபம் பேசியதாவது:-மராட்டியத்தில் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் என்னை அணுகினர். தன்னை கட்சியில் தலையிட வேண்டாம் எனவும், மகாவிகாஸ் அகாடி அரசை கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சி நிலவ வேண்டும் என தெரிவித்தனர்.மத்திய முகமைகளின் விசாரணை எனது வீடு உள்பட நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் நடைபெறும் என மிரட்டினர். இந்த மிரட்டலுக்கு நான் அடிபணிய மாட்டேன்.எனக்கு சொந்தமாக 29 பங்களாக்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.நான் கூறுகிறேன். நாம் அனைவரும் பஸ் மூலம் பங்களாக்களுக்கு சுற்றுலா செல்லலாம். அந்த பங்களாக்கள் அங்கு கட்டப்பட்டு இருந்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இல்லை யெனில் புகார் தெரிவித்த நபரின் கன்னத்தில் சிவசேனா கட்சியினர் சேர்ந்து அறைய வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.