‘கேபிள்’ ரயில்வே பாலம்: ஜம்மு காஷ்மீரில் மும்முரம்
புதுடில்லி : பொறியியல் துறையில் அதிசயம் என்று வியக்கும்படி, ‘கேபிள்’ ரயில்வே பாலம் கட்டும் பணி ஜம்மு காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில்வே பாதை அமைக்கப்படுகிறது. இதில், ரீசி மாவட்டத்தில் அஞ்சி ஆற்றின் குறுக்கே கத்ரா – ரீசி பகுதிகளை இணைக்கும் வகையில் மிக உயரமான பாலம் கட்டப்படுகிறது. இந்தப் பாலம் 473.25 மீட்டர் நீளம் கொண்டது. இது கேபிள் எனப்படும் இரும்பு கம்பிகளை வைத்து கட்டப்பட உள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் 276 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால், ஜம்மு காஷ்மீரின் இந்த ரயில்வே பாலம் 331 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.