கடலில் விழுந்த விமானம் ஒருவர் உடல் மீட்பு

மோர்ஹெட் சிட்டி:அமெரிக்காவில் சமீபத்தில் கடலில் விழுந்த சிறிய ரக விமானத்தில் பயணித்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கூறினர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து சமீபத்தில் புறப்பட்ட சிறிய ரக பயணியர் விமானம் கடலில் விழுந்தது. விமானத்தில் ‘பைலட்’ உட்பட எட்டு பேர் இருந்துள்ளனர்.இவர்களை தேடும் பணிகளை அமெரிக்க கடலோர காவல் படையினர் உடனடியாக தொடங்கினர். இதில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டு உள்ளது.
சம்பவம் குறித்து அதிகாரிகள்கூறியதாவது:விமானத்தில் பயணித்த ஒருவரின் உடல் மீட்கப் பட்டு உள்ளது. பயணியர் வட கலிபோர்னியாவின் கார்டெரெட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். குடும்பத்தினர் நலன் கருதி அவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படாமல் உள்ளது.தேடுதல் பணிகள் பல்வேறு கட்டங்களாக தொடர்கிறது. விரைவில் மற்றவர்கள் நிலை குறித்து தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.