ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்….

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இங்கு நடந்து வருகிறது. மூன்று அறைகளில் தலா, 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கேமரா என, மூன்று அறைகளில் தலா, 14 கேமராவும், ஒவ்வொரு அறையிலும் ஒட்டு மொத்த அறையையும் கண்காணிக்கும் வகையிலும் கேமரா அமைக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.