உக்ரைனில் சைபர் தாக்குதலால் இணையதளங்கள் முடக்கம்

கியேவ்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், முக்கிய வங்கிகள் மற்றும் ராணுவம் மீது செவ்வாய்கிழமையன்று சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் நாட்டு அதிகாரிகள் இந்தத் தகவலை தெரிவித்தனர். உக்ரைனில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் இணையதளங்கள் உட்பட குறைந்தது 10 இணையதளங்களை முடங்கிப் போவதற்குக் காரணமானது DDoS தாக்குதல். இவற்றைத் தவிர இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளின் இணையதளங்களும் பாதிக்கப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.