அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது – உதயநிதி ஸ்டாலின்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. கண்டிப்பாக நிறைவேற்றும் என தி.மு.க. இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஓராண்டில் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 9 மாதங்களில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவில் 3-ம் அலை கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.