வீட்டுக்குவீடு ஹாட் பாக்ஸ் – வினியோகிக்கும் திமுக…

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் தி.மு.க.,வினர் வினியோகம் செய்த ‘ஹாட்பாக்ஸ்’கள் ஆங்காங்கே, அரசியல் கட்சியினரிடம் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் வினியோகம் எல்லாம் ஒரு காலத்தில் இலைமறை காயாக நடந்து வந்தது. கடந்த சில தேர்தல்களாக, அந்நிலை மாறி, வெளிப்படையாகவே நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.