நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம்…

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. அதே போல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லாரி டிரைவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு தெரிவித்தது. மேலும், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.