எல்.கே.ஜி., – யு.கே.ஜி.,க்கு நாளை வகுப்புகள் துவக்கம்…

எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் நாளை துவங்க உள்ளன. தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளுக்கான பள்ளிகளையும், பிளே ஸ்கூல் எனப்படும் மழலையர் பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.