வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்ததால், நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இப்போது வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் சூழலில் வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வேக்சின் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.