நடைபாதை வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்!!!

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட குடிசை மாற்று வாரிய பகுதி அருகே நடை பாதையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இந்தக் கடைகளை தானாகவே அகற்றி வெளியேறும் படி குடிசை மாற்று வாரியம் மூலமாக ஒரு அறிவிப்பு நோட்டீஸ் அந்த கடைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தவறும் பட்சத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குடியிருப்பின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று மிரட்டல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது இதனைக் கண்ட வியாபாரிகள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கினார்கள் இதை அப்பகுதி வணிகர் சங்க தலைவர் கோவிந்தன் மற்றும் செயலாளர் ஸ்ரீராம் மற்றும் பலர் தலைமை தாங்கினர் பிறகு காவல்துறை மற்றும் வாரியத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது வணிகர் சங்க பேரவை மாவட்டத் தலைவர் எம் டி மோகன் அவர்கள் நேரில் வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையும் குடிசை மாற்று வாரிய அலுவலக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளுக்கு வணிக வளாகங்கள் கட்டித்தரும் வரை வியாபாரிகள் கடைகளை அகற்றக் கூடாது என்று அவரிடம் கோரிக்கை வைத்து அதற்கு அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்தது பிறகு உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.