தொழிலதிபர்களை சிறையில் தள்ளும் 26,000 விதிமுறைகள்!!!

புதுடில்லி : தொழில் செய்வதை சுலபமாக்க, மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் நிலையில், சாதாரண குற்றங்களுக்கு கூட தொழிலதிபர்களை சிறையில் தள்ளும் 26 ஆயிரம்விதிமுறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்’ எனும் அமைப்பு, இந்திய தொழில் துறையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நம் தொழில் துறையில், ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் இன்னும் உள்ளன. இந்தியாவில் தொழில் செய்வோர், 69ஆயிரத்து 233 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவற்றில், 26ஆயிரத்து,134 விதிமுறைகளை பின்பற்ற தவறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.