ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கும் கடுமையான வானிலை
ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ இன்னும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை அறிவித்துள்ளது. மேலும், சில உள்ளூர் பகுதிகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.