ஆடுற பல்லை ஸ்ட்ராங்கா வைக்க முடியுமாம்!

ஆட்டம் காணும் பற்களை மீண்டும் உறுதியாக்கும் வீட்டு வைத்தியம், அனைவருக்குமே பலனளிக்கும்!

​1.ஆயில் புல்லிங்

2.நெல்லிக்காய் தூள் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

தண்ணீரில் நெல்லிக்காய் தூளை கலந்து இந்த கலவையால் வாய் கொப்புளிக்கவும். தினமும் ஒரு முறை இதை செய்யலாம்.

3. பூண்டு ஒரு பல் மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒன்று அல்லது இரண்டை பாதிக்கப்பட்ட பல்லின் ஈறுக்கும் கன்னத்துக்கும் நடுவில் வைக்கவும். முடிந்தவரை நீண்ட நேரம் வைத்திருந்து பிறகு விட்டு விடுங்கள். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்.

உப்பு – 1 டீஸ்பூன்

4. கடுகு எண்ணெய் – சில துளிகள்

உப்பில் சில துளி எண்ணெய் சேர்த்து இரண்டையும் பேஸ்ட் ஆக்கி குழைக்கவும். பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிக்கு ஓரிரு நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.

வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இதை தினமும் செய்து வரலாம்.

இந்த எண்ணெய் மற்றும் உப்பு பேஸ்ட்டை 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும். பிறகு வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள்.

5. மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் அரை டீஸ்பூன்

பொடிகளை கலந்து உங்கள் ஈறுகளில் கலவையை மென்மையாக மசாஜ் செய்யவும். ஈறுகளை சுமார் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவும் பிறகு வாயை கொப்புளிக்க வேண்டும்.

பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் அவசியம். இந்த ஊட்டச்சத்து குறைபாடு பல் ஆரோக்கியத்தை மோசமாக்கி தளர்வான மற்றும் ஆட்டம் காணும் பற்களை உண்டாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துகொள்ளும் போது பல் வலிமையை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு.