அமெரிக்க கடற்படை வீரர்கள் நீக்கம்…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான வலிமை வாய்ந்த பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. ஆனாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயேகூட தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சாமானிய மக்கள் முதல் படை வீரர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் இன்னும் தயக்கம் காணப்படுகிறது.இந்த நிலையில் அமெரிக்க கடற்படையில் 240 வீரர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து விட்ட நிலையில் அவர்கள் பணிநீக்கம் செய்து, படையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதை கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அங்கு மேலும் 8 ஆயிரம் கடற்படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் மீதும் அடுத்து நடவடிக்கை பாயும்.அமெரிக்காவில் கடற்படை வீரர்கள் 2021 நவம்பர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.