அமெரிக்காவில் ஒரேநாளில் 1,34,733 பேருக்கு கொரோனா.!
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,34,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7,89,53,417 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,804 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 9 லட்சத்து 38 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.