கோயம்பத்தூரில் இருந்து சென்னை சென்ற ரயிலில் 3.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல்…!!!
சேலம்: கோயம்பத்தூரில் இருந்து சென்னை சென்ற ரயிலில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான 3.9 கிலோ தங்க நகைகளை சேலம் ஜங்ஷனில் வைத்து , ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் வழியே சென்ற ரயிலில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியே 77 லட்சம் மதிப்பிலான தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அரசுக்கு வரியினங்கள் செலுத்தாமல் தங்கம், வெள்ளி நகைகளை கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.