கொலம்பியாவில் நிலச்சரிவு 14 பேர் பலி

போகோடா: கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், பெரேரா நகராட்சியில் உள்ள ரிசரால்டாவில் நேற்று முன்தினம் காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் சிக்கின. இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டப்பட்டவை என்பதால், நிலச்சரிவால் பலத்த சேதமடைந்து உள்ளன. இதில், 14 பேர் மண்ணில் புதைந்து பலியாகி உள்ளனர். மேலும்,  35 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவரை காணவில்லை. அப்பகுதியில் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அப்பகுதியில் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், அங்கு குடியிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி கொலம்பியா அதிபர் இவான் டியூக் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.