வெள்ளெலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் கொரோனா!!
அண்மையில் ஹாங்காங்கில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்தது. இது தொடர்பான ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகள் மூலம் 50 பேருக்கு வைரஸ் பரவியது தெரிய வந்தது. இதனை அடுத்து 2,200 வெள்ளெலிகள் அழிக்கப்பட்டன. இது தொடர்பாக ஹாங்காங் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆய்வில், வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை வைரஸ் பரவி இருந்ததும், அந்த வகை வைரஸே ஹாங்காங் மக்களுக்கு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.