பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு…
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் விரைவுசாலை அருகே 2 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொலை செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் அவர்களது உடல்களை மீட்டனர். முன்பகையால் இது நடந்திருக்க கூடும் என போலீசார் செய்தியாளர்களிடம் கூறினர். அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலங்களாக அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.