பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்…

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இந்த கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தற்போது அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து பாட வேலைகளிலும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடங்களை தடை இன்றி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.