கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு…

கனடாவில் எல்லை கடந்து செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் ‘சுதந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் லாரிகளுடன் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வரும் லாரி டிரைவர்களின் போராட்டத்தால் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கனடாவில் லாரி டிரைவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், தற்போது இந்த போராட்டம் உலகின் பிற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.அந்த வகையில் நியூசிலாந்தில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் வெலிங்டனில் லாரிகள் மற்றும் கார்களில் அணிவகுத்து பாராளுமன்றம் அமைந்துள்ள வீதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் வெலிங்டன் நகரில் பதற்றம் நீடிக்கிறது. இதேபோல் தெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் லாரி டிரைவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.