காய்ச்சலுக்கு போடும் டோலோ 650-ஐ அதிகமா யூஸ் பண்ணுவீங்களா?

மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். அதில் காய்ச்சல், கை மற்றும் கால் வலிக்கு அதிகம் பயன்படுத்தும் ஓர் மருந்து தான் டோலோ 650 மாத்திரை. இந்த மாத்திரையை மருத்துவ ஆலோசனையின்றி ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த மருந்து பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எத்தகைய சூழ்நிலையிலும் இந்த மருந்தை மருத்துவ ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டோலோ 650 என்பது ஒரு லேசான வலி நிவாரணி மாத்திரை. இது காய்ச்சலுக்கு மட்டுமின்றி, வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டோலோ 650 பல சாதாரண உடல் உபாதைகளால் ஏற்படும் வலியைத் தணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

யாரெல்லாம் டோலோ 650 எடுக்கக்கூடாது ?

அழற்சி பிரச்சனை உள்ளவர்கள் டோலோ 650 மாத்திரையை எடுக்கக்கூடாது. தீவிரமான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், டோலோ 650 எடுக்கக்கூடாது. மேலும் மது பானங்களைக் குடித்ததும், டோலோ 650 மாத்திரையை எடுக்கக்கூடாது.

டோலோ 650-யின் பொதுவான பக்க விளைவுகள்:

* குமட்டல் * குறைந்த இரத்த அழுத்தம் * தலைச்சுற்றல் * உடல் பலவீனம் * அதிகப்படியான தூக்கம் * உடல்நலம் சரியில்லாமை * மலச்சிக்கல் * மயக்கம் * வாய் வறட்சி * சிறுநீர் பாதை தொற்று…

தீவிரமான பக்க விளைவுகள்:

மெதுவான இதயத் துடிப்பு * குரல் நாண்களில் வீக்கம் * நுரையீரல் தொற்று * மூச்சுத் திணறல் * நரம்பு மண்டல பாதிப்பு * வேகமான இதயத் துடிப்பு

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்